Technical Analysis Glossary words-1 in Tamil

Technical Analysis Glossary words in Tamil-சொற்களஞ்சியம்

Ask Price– கேட்கும் விலை & பங்கை விற்கும் முதலீட்டாளர் அல்லது வர்த்தகர், அந்தப் பங்கை கொடுக்க கேட்கும் விலை.

Bar Charts – பட்டை வடிவ வரைபடங்கள் & குறிப்பிட்ட பங்கின் ஆரம்ப விலை, அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை, முடிவு விலை இவை அனைத்தையும் கொண்டு வரையப்படுவது ‘பார் சார்ட்’. நான்கு விலைகளும் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வரைபடம் ‘பார்’ அதாவது பட்டை வடிவில் இருக்கும்.

Bearish Engulfing Pattern  – பேரிஷ் என்கல்ஃபிங் அமைப்பு & இது ஒரு ரிவர்ஸல் அமைப்பு. அதாவது, குறிப்பிட்ட அளவுக்கு பங்கின் விலை ஏறியிருக்கிறது என்கிற நிலையில் அதற்கு மாறாக இறங்கப் போகிறது என்பதை சுட்டிக் காட்டும் அமைப்பு.

Bid Price  – ஏல விலை -& ஒரு பங்கிற்கு முதலீட்டாளர்/வர்த்தகர் கொடுக்க விரும்பும் விலையே ஏல விலை.

Black Candlestick – கருப்பு மெழுகுவர்த்தி குச்சி -& பங்கின் முடிவு விலை, தொடக்க விலையை விட குறைவாக இருந்தால் அது கருப்பு மெழுகுவர்த்தை குச்சி அமைப்பு.

Bollinger Bands   – பாலிங்கர் பான்ட்கள் & பங்கின் விலைகளுக்கு இடைப்பட்ட தொடர்பின் அடிப்படையில் மூன்று வளைவுகள் வரைவதாக இருக்கிறது.

Bulish Engulfing Pattern – புல்லிஷ் என்கல்ஃபிங் அமைப்பு & ஒரு நாள், கருப்பு மெழுகுவர்த்தி குச்சி சார்ட் உருவாகி அடுத்த நாள், வெள்ளை மெழுகுவர்த்தி குச்சி சார்ட் உருவாகி இருந்தால், அது புல்லிஷ் என்கல்ஃபிங் பேட்டர்ன்.

Bullish Doji Star Pattern – புல்லிஷ் டோஜி ஸ்டார் அமைப்பு- & ஸ்டார் என்பது பங்கு அல்லது சந்தை அதன் தற்போதைய போக்குக்கு எதிராக செயல்பட போகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. டோஜி என்பது நிச்சயமில்லாத நிலையை குறிக்கும்.

Candle Stick Pattern – கேண்டில் ஸ்டிக் அமைப்பு & இந்த முறை மூலம் ஒரு பங்கை வாங்குவதா? அல்லது விற்பனை செய்வதா? என்கிற முடிவுக்கு வர முடியும். இந்த கேண்டில் ஸ்டிக் சார்ட் பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்ற தோற்றத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

Cap opening – அதிக இடைவெளி & பங்கின் விலை அதிக இடைவெளியுடன் ஆரம்பித்தால் அதை கேப் ஓப்பனிங் என்கிறார்கள்.

Chart Pattern – சார்ட் அமைப்பு -& விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளிப்பு மற்றும் தேவை இரண்டும் மாறி மாறி வரும். இந்த நிலையில் சார்ட் அமைப்பு முறையை பயன்படுத்தி பங்குச் சந்தை வர்த்தர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அவர்களாவே வாங்கும் மற்றும் விற்கும் முடிவை எடுக்கலாம்.

Charts – வரை படங்கள் & புள்ளி விவரங்களின் வரைபட விளக்கம்தான் சார்ட்கள்.

Close Price – முடிவு விலை & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் நிறைவு விலையே முடிவு விலை

Cup with Handle Pattern – கப் வித் ஹேண்டில் அமைப்பு & சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது என்பதை குறிக்கும் பேட்டர்ன்.

Doji Pattern – டோஜி அமைப்பு & இந்த அமைப்பு உருவாகி இருந்தால் சந்தை அல்லது பங்கின் விலை ஏற்கெனவே இருந்து வந்த பழைய நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாறப்போகிறது என்று பொருள்.

Double Bottom Pattern – டபுள் பாட்டம் அமைப்பு& பங்கின் இரு தாழ்ந்த விலை மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். இது ஒரு ரிவர்ஸல் சார்ட். அதாவது, சந்தை, அதன் தற்போதைய நிலைக்கு எதிராக செயல்பட தொடங்குவதை குறிக்கும்.

Double Top Pattern – டபுள் டாப் அமைப்பு & இது உருவாக, பங்கின் இரு உயர்ந்த விலை கிட்டத்தட்ட சமமாக இருக்க வேண்டும். இது ஒரு ரிவர்ஸல் சார்ட்.

Down Trend  – இறங்கும் போக்கு நிலை -& பங்கின் விலை இறங்கிக் ஏறிக் கொண்டிருப்பதை குறிக்கும் நிலை.

EPS & (Earning per share) – ஒரு பங்கு வருமானம் –& குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கு மூலமாக கிடைக்கும் வருமானத்தை இது குறிக்கும்.

Equity Capital – பங்கு மூலதனம்- & ஒரு நிறுவனத்தை தொடங்க அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் முதலீடு

Exponential Moving Average – EMA – எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரி – அண்மைக் கால விலைகளுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு மூவிங் சராசரி கணக்கிடும் முறை.

Flag Pattern – ஃபிளாக் பேட்டர்ன் – இந்த அமைப்பில் பங்கின் விலை இறங்கி வரும் போது, பங்கின் விலையானது மேலேறும் . அதிக விலை மற்றும் குறைந்த விலை புள்ளிகளை இணைக் கோடுகள் மூலம் இணைக்கும் போது ஃபிளாக் பேட்டர்ன் உருவாகும்.

Full Gap Down – தொடக்க விலை, முன் தினத்தின் குறைந்தபட்சவிலையை விட குறைவாக இருப்பது.

Full gap up – தொடக்க விலை, முன் தினத்தின் அதிகபட்சவிலையை விட அதிகமாக இருப்பது.

Next Post

Bollinger Bands - பாலிங்கர் பான்ட்கள்

Sat May 18 , 2024
27. பாலிங்கர் பான்ட்கள் கடந்த 1980&ம் ஆண்டு வாக்கில் ஜான் பாலிங்கர் (John Bollinger) என்பவர் உருவாக்கிய தொழில்நுட்ப வர்த்தக சாதனம்தான் பாலிங்கர் பான்ட்கள் (Bollinger Bands) . அந்தக் கால கட்டத்தில் சந்தை அதிக ஊசலாட்டத்தில் இருந்ததால் இதன் தேவை ஏற்பட்டது. அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச விலைக்கு இடையே தொடர்பு வரையறை ஏற்படுத்துவதே பாலிங்கர் பான்ட்களின் நோக்கமாக இருக்கிறது. வரையரைப்படி, அப்பர் பாண்டில் விலை அதிகமாகவும், லோயர் பாண்டில் […]

You May Like