Technical Analysis Glossary words-2 in Tamil

Technical Analysis Glossary words-2 in Tamil

Fundamental Analysis – அடிப்படை ஆய்வு & முதலீடு செய்ய தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது, அந்த நிறுவனம் சார்ந்த துறைக்கு எந்த அளவுக்கு எதிர்கால வளர்ச்சி இருக்கிறது என்பது போன்ற விசயங்களை அலசி ஆராய்வது.

Gaps Pattern – இடைவெளிகள் அமைப்பு -& இரு அடுத்தடுத்த நாட்களில் பங்கின் முடிவு மற்றும் ஆரம்ப விலைகளுக்கு இடைப்பட்ட வித்தியாசம் இது.

Hammer Candle Stick Pattern – சுத்தியல் மெழுகுவர்த்தி குச்சி & பங்கின் விலை இறங்கிக் கொண்டிருக்கும் போது கீழ் நிலையில் இந்த சுத்தியல் மெழுகுவர்த்தி குச்சி அமைப்பு உருவாகும்.

Head & Shoulder Pattern – ஹெட் அண்ட் ஹோல்டர் அமைப்பு -& பங்குச் சந்தையின் புள்ளி அல்லது பங்கின் விலை ஏறப் போகிறது அல்லது இறக்கப் போகிறது என்கிற இரு நிலைகளையும் சுட்டிக் காட்டும் ஒரு குறியீடு இது.

High  Price  – அதிகபட்ச விலை & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் உச்சபட்சவிலை’ இது.

Indicators – இண்டிகேட்டர்கள் & பங்குச் சந்தை அல்லது பங்கின் விலை போக்கை அறிந்துக் கொள்ள உதவும் அமைப்பு இது.

Intraday – இன்ட்ரா டே -& நாள் வர்த்தம் & பங்குகளை அன்றே வாங்கி அன்றே வாங்குதல். இதே போல் அன்றே விற்று அன்றே விற்பதையும் இது குறிக்கும்.

Line Charts – கோடு வடிவ வரைபடங்கள் & பங்கின் விலைகளை கோட்டின் மூலம் இணைத்தால் லைன் சார்ட் கிடைக்கும்.

Long – வாங்குவது -& பங்குச் சந்தையை பொறுத்த வரையில் முதலீடு/வர்த்தகம் செய்ய ஒரு பங்கை வாங்குவது லாங்க்.

Low Price – குறைந்தபட்ச விலை & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் குறைந்த விலை இது.

Moving Average Convergence Divergence – எம்.ஏ.சி.டி -& இந்த பகுப்பாய்வு மூலம் முதலீட்டாளர்கள், ஏற்கெனவே வாங்கி இருக்கும் பங்கை தொடர்ந்து வைத்திருக்கலமா? அல்லது விற்றுவிடலாமா? என்பதை அறிய முடியும்.

Morning Star Pattern – மார்னிங் ஸ்டார் அமைப்பு & சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு மாறாக இறங்க போகிறது என்பதை சுட்டிக் காட்டும் அமைப்பு.

Moving average – மூவிங் சராசரி -& இண்டிகேட்டர்களில் முக்கியமானது. பங்கின் போக்கு தற்போது ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என அறிந்துக் கொள்ள உதவும்.

Negative Divergence – நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் & விலை மேல் நோக்கி ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலோ அல்லது சமமான அதிகபட்ச விலையிலேயே ஊசலாடிக் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இண்டிகேட்டர்கள் கீழே செல்வது.

Open Interest – ஒப்பன் இன்ட்ரஸ்ட் – இது ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஒப்பந்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, நிலுவையிலுள்ள மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிகையை ‘ஓப்பன் இன்ட்ரஸ்ட்’ என்பார்கள்.

Open Price  – தொடக்கவிலை & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் தொடக்க விலை இது.

Partial Gap Down – தொடக்க விலை, முன் தினத்தின் முடிவு விலையை விட குறைவாக இருப்பது.

Partial Gap Up – தொடக்க விலை, முன் தினத்தின் முடிவு விலையை விட அதிகமாக இருப்பது.

Partial Gap Up – பென்னட் அமைப்பு & சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன்.