Moving Average Type– How To Calculate
மூவிங் ஆவரேஜ்கள்
இண்டிகேட்டர்களில் முக்கியமானது, மூவிங் சராசரி (Moving average).இது சந்தை அல்லது பங்கின் போக்கு தற்போது ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என அறிந்துக் கொள்ள உதவும். அதாவது, பங்குச் சந்தை புள்ளிகள் அல்லது பங்கின் விலை எந்தத் திசையில் செல்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. சுருக்கமாக சொல்வது என்றால் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும்.
மூவிங் சராசரி என்பது கடந்த காலத்தில் பங்கின் விலை எப்படி இருந்தது என்பதை கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த மூவிங் சராசரிகள் இதர தொழில்நுட்ப இண்டிகேட்டர்களான, பாலிங்கர் பான்ட்ஸ், எம்.ஏ.சி.டி, மெக்கெல்லன் ஆசிலேட்டர் பற்றி அறிந்துக் கொள்ள இவை அடிப்படையாக இருக்கின்றன.
மூவிங் சராசரியில் மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன.
அவையாவன:
- எளிய மூவிங் சராசரி (Simple Moving Average – SMA)
- எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரி (Exponential Moving Average -EMA)
- வெயிட்டெட் மூவிங் சராசரி (Weighted Moving Average – WMA)
- குமுலேடிவ் மூவிங் சராசரி (Cumulative Moving Average (CMA)
இந்த மூவிங் சராசரிகள் பங்கு அல்லது சந்தையின் போக்கை கணிக்க உதவுகிறது. மேலும், ஆதரவு மற்றும் தடுப்பு நிலைகளை வரையறுக்க உதவுகின்றன.
சிம்பிள் மூவிங் ஆவரேஜ்
எளிய மூவிங் சராசரி என்பது குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கின் சராசரி விலையை கணக்கிடுவது மூலம் உருவாக்கப்படுகிறது.
பெரும்பாலான எளிய மூவிங் சராசரி கணக்கீட்டில் பங்கின் முடிவு விலையே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஐந்து நாள் எளிய மூவிங் சராசரி என்பது பங்கின் ஐந்து நாட்களின் முடிவு விலையின் சராசரியாக இருக்கிறது. பழைய புள்ளி விவரங்களை கொண்டு, புதிய புள்ளி விவரங்கள் பெறப்படுகிறது.
கீழே மூன்று தினங்களுக்கான ஐந்து நாட்கள் எளிய மூவிங் சராசரி உதாரணமாக தரப்பட்டிருக்கிறது.
இன்றைய முடிவு விலை மற்றும் கடந்த நான்கு நாள்களின் முடிவு விலை ஆக மொத்தம் ஐந்து நாட்களின் விலை எடுத்துக் கொள்ளப்பட்டு எளிய மூவிங் சராசரி (எஸ்.எம்.ஏ) கணக்கிடப்பட்டிருக்கிறது.
நாளின் முடிவு விலை (ரூபாயில்) & 21, 22, 23, 24, 25, 26, 27 & ஏழு நாட்களுக்கானது
முதல் நாளின் ஐந்து நாள் எஸ்.எம்.ஏ & (21+22+23+24+25)/5 = 23
இரண்டாம் நாளின் ஐந்து நாள் எஸ்.எம்.ஏ & (22+23+24+25+26)/5 =24
மூன்றாம் நாளின் ஐந்து நாள் எஸ்.எம்.ஏ & (23+24+25+26+27)/5 =25
முதல் நாளின் மூவிங் ஆவரேஜ், அன்றைய தினத்தையும் சேர்த்து முந்தைய நான்கு தினங்களின் விலை சராசரியை குறிப்பதாக இருக்கிறது.
இரண்டாம் நாளின் ஐந்து நாள் எஸ்.எம்.ஏ கணக்கிடும் போது முதல் நாளின் விலை (ரூ. 21). எடுத்துக் கொள்ளப்படாமல் அதற்கு பதில் புதிய விலை (ரூ. 26 ) எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதே போல்தான் மற்ற நாள்களுக்கான ஐந்து நாள் எஸ்.எம்.ஏ. கணகிடப்படுகிறது.
இந்த எஸ்.எம்.ஏ சந்தையின் போக்கு ஏறுமுகத்தில் இருக்கிறதா அல்லது இறங்குமுகத்தில் இருக்கிறதா? என்பதை ஓரளவு குறிப்பிடும்.படுத்தப்படுகிறது. காரணம், பழைய விலைகளின் அடிப்படையில் இது கணக்கிடுவதாக இருக்கிறது. இதற்கு அடுத்த நிலையில் சந்தையை கணிக்க வந்ததுதான், எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்.