Exponential Moving Average – How To Calculate-part 3
எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்
இந்த இ.எம்.ஏ& வில் அண்மைக் கால விலைகளுக்கு அதிக வெயிட்டேஜ் (More Weight) கொடுக்கப்படுவதால் அது எஸ்.எம்.ஏ&ஐ விட சந்தையின் போக்கை சரியாக கணிக்க உதவும்.
மூவிங் சராசரியில் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்து, மிக அண்மைக் கால விலைகள் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இ.எம்.ஏ கணக்கிடுவதில் மூன்று வழி முறை இருக்கின்றன.
முதலில் எஸ்.எம்.ஏ கணக்கிடப்படுகிறது. இது முந்தைய காலத்தின் இ.எம்.ஏ.& ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அடுத்து வெயிட்டேஜ் மல்டிபிளையர் கணக்கிப்படுகிறது.
மூன்றாவதாக, எக்ஸ்போனென்ன்ஷியல் மூவிங் ஆவரேஜ் கணக்கிடப்படுகிறது.
20 நாட்களுக்கான இ.எம்.ஏ&ஐ கணக்கிடுவதற்கான சூத்திரம் கீழே தரப்பட்டிருக்கிறது.
SMA : 20 period sum / 20 .
Multiplier : (2 / (Time periods + 1) ) = (2 / (20 + 1) ) = 0.09524
EMA : {Close – EMA (previous day)} x multiplier + EMA (previous day)
20 நாட்களுக்கான எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரி என்பது மிகவும் அண்மைக் கால விலையில் 9.52 விழுக்காடு வெயிட்டேஜ் கொண்டிருக்கிறது. 20 நாள் இ.எம்.ஏ. 9.52% இ.எம்.ஏ. என்றும் அழைக்கப்படுகிறது.
நீண்ட காலத்துகான வெயிட்டேஜ்-ஐ விட குறுகிய காலத்துகான வெயிட்டேஜ் அதிகமாக இருப்பதை காணலாம். மூவிங் சராசரி கணக்கிடுவதற்கான கால வரம்பு இரு மடங்காக அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் வெயிட்டேஜ் பாதியாக குறைக்கப்பட்டு கணக்கிடப்படும்.
கீழே 20 நாட்களுக்கான எளிய மூவிங் சராசரி மற்றும் 20 நாட்களுக்கான எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரியை ஏ.பி.சி. என்கிற நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறோம்.
எளிய மூவிங் சராசரி கணக்கிடுவது பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. 20 நாட்களுக்கான சிம்பிள் மூவிங் சராசரி என்பது இருபது நாட்களின் விலையையும் கூட்டி இருபதால் வகுக்க கிடைப்பதாகும்.
இங்கே முதல் கணக்கீட்டில் எளிய மூவிங் சராசரி 5460 ஆக இருக்கிறது. இதுவே எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரி கணக்கிட எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இ.எம்.ஏ. கணக்கிடுவதற்கான சிறப்பு சூத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இ.எம்.ஏ. கணக்கீடு, எளிய மூவிங் சராசரி உடன் தொடங்குவதால், அது 20 நாட்கள் வரை அல்லது அதற்கு முந்தைய காலம் வரை உண்மையான நிலையை பிரதிபலிக்கும் என சொல்ல முடியாது. இதனால், குறுகிய காலத்தில் எக்ஸல் கணக்கீடு மற்றும் சார்ட் கணக்கீட்டு முறையில் இ.எம்.ஏ. வேறுபாட்டுடன் காணப்படும்.