டபுள் பாட்டம் அமைப்பு
ஒரு பங்கின் விலை அல்லது சந்தையின் புள்ளிகள், அதன் தற்போதைய நிலைக்கு எதிராக செயல்பட தொடங்குவதை (ரிவர்ஸல்) இந்த அமைப்பு (பேட்டர்ன்) சுட்டிக் காட்டுகிறது.
டபுள் பாட்டம் பேட்டர்ன் என்பது ஒரு சார்ட் பேட்டர்ன். இதில், பங்கின் இரு தாழ்ந்த (ஙிஷீ௴௴ஷீனீ) விலை மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். இந்த சார்ட் அமைப்பு அனைத்து கால வரம்புகளிலும் உருவாகும்.
ஒரு சார்ட், டபுள் பாட்டம் பேட்டர்ன் தானா? என்பதை வகைப்படுத்த சில விசஷயங்கள் நடக்க வேண்டும்.
அவற்றில் முக்கியமான மூன்று வருமாறு:
1. பங்கின் இரு தாழ்ந்த விலைகள் கிட்டதட்ட சமமாக இருக்க வேண்டும்.
2. இந்த இரு தாழ்ந்த விலைகள் உருவாவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவும் கிட்டத்தட்ட சமமாக இருக்க வேண்டும்.
3. இரண்டாவது தாழ்ந்த நிலையில் வர்த்தகமாகும் பங்குகளின் வர்த்தக அளவு (வால்யூம்) குறைந்திருக்க வேண்டும்.
டபுள் பாட்டம் அமைப்பில் பல மாதங்களாக பங்கின் விலை கீழ் இறங்கிய நிலையில் காணப்படும். முதல் தாழ்ந்த விலையை, தற்போதைய டிரெண்டின் குறைந்தபட்ச புள்ளியாக குறித்துக் கொள்ள வேண்டும். முதல் உயர் விலையை அடைந்த பிறகு, ஒரு உயர்வு ஏற்படும். இது 10 முதல் 20 விழுக்காடு அளவுக்கு இருக்கும். இரண்டாவது தாழ்ந்த நிலை உருவாகும் போது வர்த்தக அளவு குறைந்திருக்கும். இந்த நிலையில் முந்தைய குறைந்தபட்ச விலை, ஆதரவு (சப்போர்ட்) நிலையை சந்தித்து கீழ் இறங்கி இருக்கும். பல வாரங்கள் போராடியப் பிறகு அந்தப் பங்கு உயர்தடுப்பு (ரெசிஸ்டென்ஸ்) நிலைக்கும் மேலே ஏறி இருக்கும். அதன் பிறகு ரெசிஸ்டென்ஸ் நிலையை உடைத்துக் கொண்டு மேலேறி டபுள் பாட்டம் பேட்டர்னை நிறைவு செய்யும்.
அப்போது பங்குகளை விற்பனை செய்வதற்கான வேகம் மற்றும் அழுத்தம் (பிரஷர்) குறைந்திருக்கும். அந்நிலையில் பங்கின் போக்கு, தற்போதைய நிலைக்கு எதிராக (ரிவர்ஸல்) மாறும்.
எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும்?
இந்த பேட்டர்னில் உருவாகும் நெக் லைனுக்கு மேலே பங்கை வாங்குவதற்கான ஆர்டரை போட வேண்டும். அதாவது, இந்த இடத்தில் பங்கின் விலை ஏறத் தொடங்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பங்கின் விலை விலை. நெக் லைனை உடைத்துக் கொண்டு, மேலே செல்லும்.
டபுள் டாப் பேட்டர்ன் போலவே, டபுள் பாட்டம் பேட்டரினிலும் பங்கின் விலை போக்கு ரிவர்ஸலாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வலிமையான டவுண் டிரெண்ட் உருவான பிறகு இதை கவனிக்க தொடங்க வேண்டும்.