Weighted Moving Average – How To Calculate-part 3

Weighted Moving Average – How to calculate Weighted Moving Average formula

வெயிட்டெட் மூவிங் சராசரி

அண்மைக் கால புள்ளி விவரங்களை பயன்படுத்தி இந்த வெயிட்டெட் மூவிங் சராசரி (கீமீவீரீலீ௴மீபீ விஷீஸ்வீஸீரீ கிஸ்மீக்ஷீணீரீமீ – கீவிகி)

கணக்கிடப்படுகிறது. வெயிட்டிங் என்பது எத்தனை நாட்கள் என்பதன் கூட்டுத் தொகையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உதாரணத்துக்கு 5 நாள் வெயிட்டிங் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

1+2+3+4+5=15.

Weighted Moving Average
Weighted Moving Average

(இதே போல், 6 நாள் வெயிட்டிங், 1+2+3+4+5=6=21)

 

இதை கொண்டு வெயிட்டிங் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதாவது முதல் நாளின் வெயிட்டிங் மதிப்பு என்பது முதல் நாளின் பங்கின் விலையை அதற்கான வெயிட்டிங் ஆல் வகுக்க கிடைக்கும். இதே போல், இரண்டாம் நாளின் வெயிட்டிங் மதிப்பு என்பது இரண்டாம் நாளின் பங்கின் விலையை அதற்கான வெயிட்டிங் ஆல் வகுக்க கிடைக்கும். இதே போல் மற்ற நாள்களுக்கும் கணக்கிடப்படுகிறது.

 

 

நாள் 1 2 3 4 5
விலை 16 17 17 10 17
வெயிட்டிங் மதிப்பு& சூத்திரம் (1*P)/15 (2*P)/15 (3*P)/15 (4*P)/15 (5*P)/15
வெயிட்டட் மதிப்பு 1.07 2.27 3.4 2.67 5.67
5 நாள் (WMA) 15.07

 

 

வெயிட்டட் மதிப்பு கணக்கீடு:

(1 x 16)/15 = 1.07  ;( 2 x 17)/15 = 2.27  ; (3 x 17)/15 = 3.40  ; (4 x 10)/15 = 2.67  ;  (5 x 17)/15 = 5.67

 

இந்த ஐந்து வெயிட்டட் மதிப்புகளின் கூட்டுத் தொகைதான் வெயிட்டட் மூவிங் சராசரி.

இங்கே 5 நாள் டபிள்யூ.எம்.ஏ. = 1.07 + 2.27 + 3.40 + 2.67 + 5.67 = 15.07

—————————————————————————————————————————-