Technical Analysis Glossary words-3 in Tamil

Pennent Pattern –  பென்னட் அமைப்பு & சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன்.

Piercing Pattern  – பியர்சிங் பேட்டர்ன் & முதல் நாள் கரடி சந்தை மெழுகுவர்த்தி உருவாகி இருக்க வேண்டும். இரண்டாவது  நாளில் அது காளை சந்தை மெழுகுவர்த்தி அமைப்பாக இருந்து முதல் நாளின் மத்தியில் காணப்பட்ட விலையை விட அதிகமாக முடிவு பெற வேண்டும்

Positive Divergence   – பாசிடிவ் டைவர்ஜன்சஸ் & பங்கின் விலை கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலோ அல்லது சமமான குறைந்தபட்ச விலையிலே ஊசலாடிக் கொண்டிருக்கும் போதோ இண்டிகேட்டர்கள் மேலே செல்வது.

Pre opening session – முன் சந்தை வர்த்தகம் & தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி 15 நிமிடங்கள், 9.15 மணி வரை நடக்கும் வர்த்தகத்தை இது குறிக்கும். அப்போது சும்மா விலை குறிப்பிட்டு வாங்கவோ விற்கவோ செய்வார்கள். ஆனால், இதை 9.15 மணிக்கு உறுதிப்படுத்தினால் மட்டும்தான் ஆர்டர் நிறைவேற்றப்படும்.

Profit Book– லாப அடைவது & ஒரு பங்கை விற்று லாபம் பெறுவதை இப்படி குறிப்பிடுவார்கள்.

Range Trading – எல்லைக்குள் வர்த்தகமாவது & பங்கின் விலை, ஒரு நிலைக்கு சென்று விட்டு மீண்டும் வெகு சீக்கிரத்திலே பழைய நிலைக்கே வந்துவிடுவது.

Resistance Level & உயர்தடுப்பு நிலை – தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே செல்லும் ஒரு பங்கின் விலை ஒரு நிலையில் நின்று, மறுபடியும் கீழே இறங்க ஆரம்பிக்கும் நிலை.

RSI- Relative Strength Index – ஆர்.எஸ்.ஐ. குறியீடு & பங்குச் சந்தை குறியீட்டு எண் அல்லது பங்கின் விலை அதன் போக்கை மாற்றப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை குறியீடுதான் ஆர்.எஸ்.ஐ. டைவர்ஜென்சஸ்.

Short – விற்பனை & ஒரு பங்கை விற்பனை செய்வது.

Simple Moving Average – SMA – எளிய மூவிங் சராசரி & குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கின் சராசரி விலையை கணக்கிடுவது மூலம் உருவாக்கப்படுகிறது.

Spinning Tops Pattern – ஸ்பின்னிங் டாப்ஸ் & சந்தை அல்லது பங்கின் விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் பக்கவாட்டு என்ற சைடு வேஸ் இயக்கத்தில் இருக்கும் போது, மெழுகுவர்த்தி குச்சி சார்ட், சிறிய ரியல் பாடிகளை கொண்டிருக்கும். அது காளை மற்றும் கரடி சந்தைக்கு இடைப்பட்ட சமநிலையில் இருக்கும். அப்போது மெழுகுவர்த்தி குச்சி வெள்ளை அல்லது கறுப்பாக இருக்கும். இதை ஸ்பின்னிங் டாப்ஸ் என்பார்கள்.

Stop Loss – இழப்பு தடுப்பு & பங்கு முதலீடு மூலமான நடடம் அல்லது லாபத்துக்கான ஓர் அளவை நிர்ணயித்துக் கொள்வது.

Support Level – ஆதரவு நிலை & தொடர்ந்து இறங்கிக் கொண்டே வரும் பங்கின் விலை இறங்குவது நின்று, மீண்டும் மேலே செல்ல ஆரம்பிக்கும் இடம் ஆதரவு நிலை எனப்படுகிறது.

Technical Analysis –  தொழில்நுட்ப ஆய்வு & பங்கின் விலை நிலவரத்தை கொண்டு சார்ட்களின் உதவியுடன் அலசி ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுப்பது.

Trend – போக்கு நிலை & சந்தையின் புள்ளி அல்லது பங்கின் விலை எந்த திசையில் செல்கிறது என்பது போக்கு நிலை.

Trend line angle – டிரெண்ட் லைன் ஆங்கிள்- & -சார்ட்டில் நாட்களை குறிக்கும் லைன் மற்றும் விலைகளை இணைக்கும் டிரெண்ட் லைன், இரண்டிற்கும் இடையே உள்ள சாய்வு.

Triple Bottom Pattern  – டிரிபிள் பாட்டம் அமைப்பு & இது காளைச் சந்தைக்கான அறிகுறி. பங்கு ஒன்று அதன் ஒரே போன்ற ஆதரவு நிலையை மூன்றாவது தடவை உடைத்துக் கொண்டு மேல் நோக்கி செல்வது மூலம் இந்த அமைப்பு உருவாகும்.

Triple Top Pattern – டிரிபிள் டாப் அமைப்பு & பங்கின் விலை, ஏறுமுத்தில் இருக்கும் போது இறங்கப் போகிறது ) என்பதை குறிக்கும் அமைப்பாக இருக்கிறது.

Up Trend – ஏறும் போக்கு நிலை – & பங்கின் விலை ஏறிக் கொண்டிருப்பதை குறிக்கும் நிலை, ஏறும் போக்கு நிலைதான் பங்கை -வாங்குவதற்கான சரியான நேரமாக இருக்கும்.

Volume  –  வர்த்தக அளவு & குறிப்பிட்ட காலத்தில் வர்த்தகமான பங்குகளின் (அல்லது ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஒப்பந்தங்கள்) எண்ணிகையை குறிப்பது வர்த்தக அளவு எனப்படுகிறது.

Volume Pattern –  வால்யூம் அமைப்பு & வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கையை குறிப்பிடும். இதன் அளவை வைத்து சந்தையின் போக்கை அறிந்துக் கொள்ள முடியும்.

Weighted Moving Average – WMA  – இந்த மூவிங் ஆவரேஜ் சந்தையின் போக்கை கணிக்க உதவுகிறது. மேலும், ஆதரவு மற்றும் தடுப்பு நிலைகளை வரையறுக்க உதவுகின்றன.

White Candle Stick  – வெள்ளை மெழுகுவர்த்தி குச்சி – பங்கின் முடிவு விலை, தொடக்க விலையை விட அதிகமாக இருந்தால் அது வெள்ளை மெழுகுவர்த்தி குச்சி.