எம்.ஏ.சி.டி தொழில்நுட்ப ஆய்வு
எம்.ஏ.சி.டி என்பது மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்சஸ் ( MACD- Moving Average Convergence Divergence) என்பதன் சுருக்கம். இந்த ஆய்வை முதன் முதலாக ஜெரால்ட் அப்பெல் (Gerald Appel) என்பவர் 1960&ம் ஆண்டுகளில் உருவாக்கினார். இந்த தொழில்நுட்ப பகுப்பாய்வு, மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பகுப்பாய்வு மூலம் முதலீட்டாளர்கள், ஏற்கெனவே வாங்கி இருக்கும் பங்கை தொடர்ந்து வைத்திருக்கலமா? அல்லது விற்றுவிடலாமா? அல்லது மேலும் வாங்கலாமா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
எம்.ஏ.சி.டி தொழில்நுட்ப பங்குப்பாய்வில் மூவிங் சராசரிகள் பயன்படுத்தப்பட்டு டிரெண்ட் ஆசிலேட்டரை (Oscillator) உருவாக்குகிறது. இது குறுகிய கால மூவிங் சராசரியிலிருந்து நீண்ட கால மூவிங் சராசரியை கழிக்க கிடைப்பதாக இருக்கிறது. இறுதியில் ஒரு லைன் கிடைக்கும் அது எந்த ஒரு வரம்பும் இல்லாமல் மேலே அல்லது கீழே, பூஜ்யத்துக்கு கீழே அல்லது பூஜ்யத்துக்கு மேலே இருக்கும்.
இந்த எம்.ஏ.சி.டி முறையை நீங்கள் பின்பற்றினால், அந்த இறுதி லைனை தாண்டும் போது டிரெண்ட் வலிமையுடன் அதிகரித்து (நீண்ட காலத்தில் விலை அதிகரிக்கும் அல்லது வேகமாக வீழ்ச்சி அடையும்) இரு மூவிங் சராசரி லைன்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி செல்வதை காணலாம். அதே நேரத்தில், டிரெண்ட் வலிமையாக குறைந்துவரும் போது இரு இ.எம்.ஏ. லைன்களும் ஓன்றை ஒன்று நோக்கி செல்லும்.
இரு இ.எம்.ஏ.களுக்கு இடைப்பட்ட வேறுபாடு, கன்வெர்ஜென்ஸ்/டைவர்ஜென்ஸ் காரணியாக எம்.ஏ.சி.டி. இண்டிகேட்டரில் இருக்கிறது.
எம்.ஏ.சி.டி = குறுகிய கால இ.எம்.ஏ & நீண்ட கால இ.எம்.ஏ
இப்படி குறுகிய கால இ.எம்.ஏ&லிருந்து நீண்ட கால இ.எம்.ஏ&ஐ கழிக்க கிடைக்கும் மதிப்பை இன்டிகேட்டர் சார்ட் ஒன்றில் குறித்து வர வேண்டும். இந்த முடிவுகள் பாசிடிவ் மதிப்பு (டிரெண்ட் மேலே செல்வதாக இருக்கும்பட்சத்தில்) அல்லது நெகடிவ் மதிப்பு (டிரெண்ட் கீழ் இறங்குவதாக இருக்கும்பட்சத்தில்) ஆக இருக்கும். சார்ட்டில் குறிக்கப்பட்ட மதிப்பு, டிரெண்ட் எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதை குறிக்கும். இதன் பொருள் டைவர்ஜென்ஸ் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை குறிக்கும்.
பொதுவாக, இ.எம்.ஏ&க்கள் 12 மற்றும் 26 நாட்களுக்கானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு எம்.ஏ.சி.டி. கணக்கிடப்படுகிறது. வர்த்தகர்கள் அவர்களின் வர்த்தக முறை மற்றும் வசதிக்கு ஏற்ப இந்த மதிப்புகளை மாற்றிக் கொள்வது நல்லது.
எம்.ஏ.சி.டி&ன் நோக்கம்
எம்.ஏ.சி.டி மதிப்பு பாசிடிவ் ஆக இருந்தால் (அதாவது குறுகிய கால இ.எம்.ஏ& ஆனது நீண்ட கால இ.எம்.ஏ&ஐ விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்) அது பங்கு அல்லது பங்குச் சந்தை மேல் நோக்கி செல்வதை குறிக்கும். உங்களின் வர்த்தக முறையை பொறுத்து, நீங்கள் ஷார்ட் (Short) செல்வதை தவிர்க்கலாம் அல்லது நீங்கள் ஏற்கெனவே ஷார்ட் பொசிஷனில் இருக்கும்பட்சத்தில், நீங்கள் உங்களின் பொசிஷனை முடிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் காட்டும்.
எம்.ஏ.சி.டி மதிப்பு நெகடிவ் ஆக இருந்தால் (அதாவது குறுகிய கால இ.எம்.ஏ & ஆனது நீண்ட கால இ.எம்.ஏ&ஐ விட குறைவாக இருக்கும்பட்சத்தில்) அது பங்கு அல்லது பங்குச் சந்தை கீழ் நோக்கி செல்வதை குறிக்கும். உங்களின் வர்த்தக முறையை பொறுத்து, நீங்கள் லாங் (Long) செல்வதை தவிர்க்கலாம் அல்லது நீங்கள் ஏற்கெனவே லாங் பொசிஷனில் இருக்கும்பட்சத்தில், நீங்கள் உங்களின் பொசிசனை முடிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் காட்டும்.
பொதுவாக, இ.எம்.ஏ&க்கள் 26 நாள்கள் மற்றும் 12 நாட்களுக்கானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு எம்.ஏ.சி.டி. கணக்கிடப்படுகிறது.
26/12 என்பது பெரும்பாலான நிபுணர்கள் பயன்படுத்துவதாக இருக்கிறது. இங்கே 26 நாள் இ.எம்.ஏ. மெதுவானதாகவும், 12 நாள் இ.எம்.ஏ. வேகமானதாகவும் இருக்கிறது.
எம்.ஏ.சி.டி கணக்கீடு
எம்.ஏ.சி.டி மதிப்பை கணக்கீடுவது எளிது. குறுகிய கால இ.எம்.ஏ&லிருந்து நீண்ட கால இ.எம்.ஏ&ஐ கழிக்க கிடைப்பதாக இருக்கிறது. இந்த இரு இ.எம்.ஏ.&க்களும் சந்திக்கும் போது எம்.ஏ.சி.டி. மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்ய புள்ளியை நெருக்கி இருக்கும். அதாவது, இரு இ.எம்.ஏ&க்களும் சந்திக்கும் புள்ளி ஜீரோ பாயிண்ட் எனப்படுகிறது.
எம்.ஏ.சி.டி = இ.எம்.ஏ (12) & இ.எம்.ஏ (26)