எம்.ஏ.சி.டி குண நலன்கள்
* நீண்ட கால முதலீட்டுக்கான டிரெண்டை கண்டறிந்து முதலீடு செய்ய தொழில்நுட்ப குறியீடாக எம்.ஏ.சி.டி இருக்கிறது. இதை பின்பற்றி நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும்.
* இந்த எம்.ஏ.சி.டி மதிப்பை பொறுத்து பங்குச் சந்தை வர்த்தக மென்பொருள் (சாஃப்ட்வேர்) உருவாக்கப்பட்டிருக்கிறது.
* குறுகிய கால முதலீட்டுக்கு இந்த எம்.ஏ.சி.டி முறை பெரிய அளவில் உதவாது.
* சந்தை அதிக ஏற்றத்தில் இருக்கும் போது இந்த எம்.ஏ.சி.டி பலன் தராது.
எப்போது பயன்படுத்துகிறார்கள்?
எம்.ஏ.சி.ஏ.&ஐ பயன்படுத்தும் பகுப்பாய்வார்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
* எம்.ஏ.சி.டி. சிக்னல் லைன் என்கிற ஜீரோ பாயிண்டுக்கு கீழே இருந்து மேலே சென்று, சிக்னல் லைனை தாண்டி செல்லும் போது பங்கை வாங்குவதற்கான குறியீடாக பயன்படுத்துகிறார்கள்.
* எம்.ஏ.சி.டி. சிக்னல் லைன் என்கிற ஜீரோ பாயிண்டுக்கு மேலே இருந்து கீழ் நோக்கி இறங்கி, சிக்னல் லைனுக்கு கீழே இறங்கும் போது பங்கை விற்பதற்கான குறியீடாக பயன்படுத்துகிறார்கள்.
* எம்.ஏ.சி.டி. ஜீரோ பாயிண்டை தாண்டி ஜீரோவுக்கு கீழே இருந்து ஜீரோவுக்கு மேலே செல்வது வாங்குவதற்கான அறிகுறியாக இருக்கிறது.
* எம்.ஏ.சி.டி. ஜீரோ பாயிண்டை தாண்டி ஜீரோவுக்கு மேலே இருந்து ஜீரோவுக்கு கீழே இறங்கி வருவது விற்பதற்கான அறிகுறியாக இருக்கிறது.
பங்குச் சந்தை குறிப்பிட்ட காலத்தில் அதிக ஏற்றமோ அல்லது இறக்கமோ இல்லாமல் பக்க வாட்டில் நகர்ந்துக் கொண்டிருந்தால் அதை ஆங்கிலத்தில் ‘சைட்வேஸ் டிரெண்டிங் மார்க்கெட்’ என்பார்கள். இது போன்ற கால கட்டத்தில் ஜீரோ பாயிண்டை தாண்டி அல்லது இறங்கி செல்வது அடிக்கடி நடக்கும். அப்போது எந்த முதலீட்டு மற்றும் வர்த்தக முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
பொதுவாக பங்கு விலை அல்லது சந்தை புள்ளிகள் மேலே செல்லும் போக்கு காணப்படும் போது எம்.ஏ.சி.டி. முறையை பயன்படுத்தி முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
மேலே செல்லும் மூவிவ்மென்ட் வலிமையாக இருந்தால் வாங்குவதற்கும், கீழ் இறங்கும் மூவிவ்மென்ட் வலிமையாக இருந்தால் விற்பதற்குமான அறிகுறியாகும்.