Flag and Bennett system

ஃபிளாக் மற்றும் பென்னட் அமைப்பு

தொழில் நுட்ப ஆய்வில் பங்கின் விலை போக்கில் ஃபிளாக் (சதுர வடிவ கொடி) மற்றும் பென்னட்ஸ் (முக்கோண வடிவ கொடி) என்பது குறுகிய கால தொடர்ச்சியான (ஒன்று முதல் ஐந்து வாரங்கள்) அமைப்பு (பேட்டர்ன்). அவை ஒரு போக்கில் (டிரெண்ட்) நிலை பெற்றுள்ளது என்பதை குறிப்பதாக இருக்கிறது. மேலும், விலை இடையில் நிலை பெற்று தொடர்ந்து மேலேறும் என்பதை வலிமையாக சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

ஃபிளாக் பேட்டர்ன் Flag & Pennent Pattern)எப்போது உருவாகும்?

பங்கின் விலை இறங்கி வரும் போது (அல்லது பங்கின் விலை இறங்குமுகத்தில் இருக்கும் போது) பங்கின் விலையானது மேலேறுவது அதிக (Peak) விலை மற்றும் குறைந்த (Trough)விலை புள்ளிகளை இணைக் கோடுகள் மூலம் இணைக்கும் போது ஃபிளாக் பேட்டர்ன் உருவாகும்.
இந்த கோட்டின் சாய்வு (ஸ்லோப்), பங்கின் விலை எந்த திசையில் செல்கிறது என்பதை குறிப்பதாக இருக்கும்.

உதாரணமாக ஏ.பி.சி. என்கிற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.

அதன் பங்கின் வலிமையான விலை ஏற்றம் நடுப்பகுதியில் இருக்கிறது.

சார்ட்டில் இரு ஃபிளாக்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. உயர்ந்த விலை புள்ளிகள் மற்றும் குறைந்த விலை புள்ளிகளை இணைக்கும் கோடுகள் இணையாக செல்கின்றன. மேலும், பங்கின் விலை போக்கு, அது செல்லும் திசையை குறிப்பதாக இருக்கிறது.

பென்னட்ஸ்

மிகச் சுருக்கமாக சொல்வது என்றால் சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன்.
அவை குறைந்த அதிக புள்ளிகள் (lower highs) மற்றும் உயர்ந்த குறைந்த புள்ளிகள் ( lower lows) இணைந்து உருவாகின்றன. உயர்ந்த விலை புள்ளிகள் மற்றும் குறைந்த விலை புள்ளிகள் வழியாக செல்லும் கோடு சந்திக்கும் இடம் கன்வெர்ஜ் (converge ) ஆக இருக்கிறது. கன்வெர்ஜிங் லைனுக்கு வெளியே பங்கின் விலை போக்கு மாறுவது மூலம் இந்த அமைப்பு நிறைவு செய்யப்படுகிறது.

சார்ட்டை பார்த்தால் இது தெளிவாக புரியும். சான்று மூலம் பார்ப்போம்.
நம் வழக்கமான ஏ.பி.சி. என்கிற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.

அதன் பங்கின் விலை அண்மைக் கால ஏற்றத்தில் பென்னட்ஸ் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. உயர்ந்த மற்றும் தாழ்ந்த லைன்கள் கன்வெர்ஜ் ஆகி குறுகிய கால முக்கோணங்களே உருவாக்கி இருக்கின்றன. உயர்ந்த பென்னட் லைனை விட, விலை வித்தியாசம் அதிகரிக்கும் போது இந்த பேட்டர்ன் நிறைவு பெறும்.

மேலே விவரிக்கப்பட்ட இரு அமைப்புகளை பயன்படுத்தி வர்த்தகம் செய்யலாம்.

அமைப்பின் காணப்பட்டது போல் அதிகபட்ச புள்ளிகளை இணைக்கும் கோடு, ஏதாவது ஒரு தருணத்தில் உடைத்துக் கொண்டு பங்கின் விலை அல்லது குறியீட்டின் புள்ளிகள் செல்லும். அது அந்தப் பங்கை வாங்குவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு வாங்கும் போது அதற்கான இழப்பு தடுப்பாக குறைந்தபட்ச புள்ளிகளை இணைக்கும் கடைசி பாரின் விலையை அல்லது புள்ளியை வைத்துக் கொள்ளவும்.